Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 25 April 2025
webdunia

என்னே ஒரு பாட்டு: 'நீதானே' மெலடிக்கு குவியும் பாராட்டுக்கள்

Advertiesment
mersal
, வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (22:23 IST)
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'மெர்சல்' படத்தின் இரண்டாம் பாடலான 'நீதானே' என்ற பாடல் ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்ரேயா கோஷல் ஆகியோர்களின் காந்தக்குரலில் சற்று முன் வெளியாகியுள்ளது.



 
 
நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்
சொன்னதால் உடைந்தேன்
 
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ! நீதானே  
 
என்ற வரிகளில் தொடங்கும் இந்த பாடல் ஒவ்வொரு வரியிலும் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் ரசம் சொட்ட சொட்ட உள்ளது. 
 
விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் பிரபலங்களும் இந்த பாடலை கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நடிகை த்ரிஷா இந்த பாடலை கேட்டு சொக்கி போய்விட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 4 நிமிடம் 27 வினாடிகள் ஓடும் இந்த பாடல் நிச்சயம் அனைத்து தரப்பினர்களையும் கவரும் என்பதில் சிறு ஐயமும் இருக்காது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்த நீச்சலுடையில் டைட்டானிக் நாயகன் - நாயகி!