Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும். என்ன சொல்கிறது மெர்சல் பாடல்

Advertiesment
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும். என்ன சொல்கிறது மெர்சல் பாடல்
, வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (23:11 IST)
ரஜினி, கமல் போலவே விஜய்யும் வெகுவிரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கபடும் நிலையில் அவரது ஆசையை எதிரொலிக்கும் வகையில் 'ஆளப்போறான் தமிழன்' என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலில் உள்ள வரிகளில் சில விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்பது குறித்த மறைமுக கருத்து பொதிந்துள்ளது. குறிப்பாக கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..என்ற வரிகள் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிகிறது.



 
 
இந்த நிலையில் ஆளப்போறான் தமிழன் பாடலின் முழுவரிகளை பார்ப்போமா!
 
ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு   தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு!
 
முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..
 
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
 
சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
இன்னும் உலகம் ஏழ
அங்க தமிழப்பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி...
 
வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
 
வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
 
தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்
 
ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற  ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின்  முதல்மொழி உசுரெனக் காத்தோம்
 
தாய்நகரம் மாற்றங்கள் நேரும்
உன்மொழி சாயும் என்பானே
பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
 
முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழுகண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும் 
 
நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் அலையுமோ  நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும்
 
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே
 
வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் 
வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
மாறாது எந்நாளும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் 'விவேகம்' படத்தில் ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை