கார்த்தி மற்றும் அரவிந்த்சுவாமி நடிப்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ள மெய்யழகன் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள், கிளர்வோட்டம்(டீசர்) எல்லாம் மிக வித்தியாசமாக அமைந்தததால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல் மெல்லிய உணர்வு கொண்ட குடும்ப உறவுகள் பற்றிய படமாக இருக்கும் என தெரிகிறது.
இந்நிலையில் படம் வெளியாகி இப்போது ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பார்த்து வெளியில் வரும் ரசிகர்கள் கருத்துகளை சொல்ல ஆரம்பித்துள்ளனர். அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.
-
படம் மிக மெதுவாக அழகாக செல்கிறது. ஆனால் அந்த ஊர்களுக்கு நாம் சென்று வந்ததைப் போல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.
-
சென்னையில் வாழும் என்னைப் போன்றவர்களுக்கு அந்த ஊருக்கு ஒரு வெக்கேஷன் சென்று வந்ததைப் போன்ற ஃபீலிங்கைக் கொடுத்தது.
-
கார்த்தி, அரவிந்த் சுவாமி இருவருக்கும் இடையிலான உறவு சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. படம் முடிந்து வெளியில் வந்ததும் நம் உறவினர்கள் யாருக்காவது பேசவேண்டும் என்பது போன்ற உணர்வு.
-
96 படத்தை போல சோகமாக முடித்துவிடுவார்களோ என நினைத்தேன். ஆனால் ஒரு ஃபீல் குட் படமாக முடிந்துள்ளது. வீட்டுக்கு போய் நம் அடுத்த வேலையைப் பார்க்கலாம்.
-
படத்தில் ஒரே ஒரு பாடல்தான். ஆனால் அதையும் சரியான இடத்தில் வைதுள்ளார்கள். பின்னணி இசை அருமையாக இருந்தது. அனைவரும் பார்க்க வேண்டிய படம்.