மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். காதலித்து திருமணம் செய்துக்கொண்ட தன் கணவர் சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருந்தார். மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கவேண்டும் என சிரஞ்சீவி சர்ஜா அவ்ளளவு ஆசைபட்டார். ஆனால், அவர் குழந்தையாகவே மனைவியின் கர்ப்பத்தில் மறு உயிர் பெற்று மகனாக பிறந்தார்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	அவ்வப்போது கணவரை மிஸ் பண்ணும் பதிவுகளை இட்டு ரசிகர்களின் ஆறுதல் அரவணைப்பில் இளைப்பாறுவார். இந்நிலையில் மேக்னா வீட்டில் வளர்ந்து வந்த செல்லப்பிராணி நாய் ஒன்று இறந்துவிட்டது. அது குறித்து எமோஷ்னலாக பதிவிட்டுள்ள மேக்னா,  
 
									
										
			        							
								
																	
	 
	பலவற்றை இழந்துவிட்டேன். அவருக்கு ஒரு அறிமுகம் தேவையில்லை…. புருனோ! என் சிறந்த நண்பர் இன்று தனது இறுதி மூச்சை சுவாசித்தார்… நான் என் மகன் அவருடன் விளையாடுவதையும், முதுகில் சவாரி செய்வதையும் விரும்பினேன்… புருனோ பொதுவாக குழந்தைகளை வெறுப்பான்… ஆனால் எப்படியோ அவர் ஜூனியர் சிரஞ்சீவியுடன்  உடன் மிகவும் மென்மையாக இருந்தார். 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	நான் நினைக்கிறேன் அவரது எஜமானரை அவர் அறிந்திருந்தார். அவர் இல்லாமல் இந்த வீடு ஒன்றல்ல… வீட்டிற்கு வந்த அனைவரும் எப்போதும் எங்களிடம் கேட்டிருக்கிறார்கள், புருனோ எங்கே? என்று...  நான் நினைக்கிறன் நிச்சயமாக சிருவுடன் இருந்து அவரை தொல்லை செய்து கொண்டு இருப்பாய் என்று என  உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.