Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெகாலி மீனாட்சி விட்டல் ராவ் நடித்துள்ள"இறுதி முயற்சி" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது....

Advertiesment
Megali Meenakshi

J.Durai

, சனி, 24 ஆகஸ்ட் 2024 (13:42 IST)
வரம் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இறுதி முயற்சி திரைப்படத்தினை இயக்குனர் நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்  உதவியாளர் வெங்கட் ஜனா எழுதி இயக்கி உள்ளார்.
 
இறுதி முயற்சி திரைப்படம் இனிதே நிறைவு பெற்றதை கொண்டாட படக்குழுவினர் மனநலம் குன்றிய சிறுவர்கள் பள்ளிக்கூடத்திற்க்கு சென்று அங்கு படிக்கும் சிறுவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி அவர்களை சந்தோஷ படுத்தி அந்த மனநலம் குன்றிய சிறுவர்களின் அன்பையும் ஆசியையும் பெற்று வந்தனர்.
 
இந்த இறுதி முயற்சி திரைப்படம் சாதாரண பெட்டி கடை வைத்திருப்பவர் முதல் பல கோடிகளில்  வணிகம் செய்யும் பெரும் தொழில் அதிபர்களும் சந்திக்கும் ஒரு பிரச்சினையை நெஞ்சத்தை பதை பதைக்க  வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்தினருடன் ரசித்து பார்க்கும் விதமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இறுதி முயற்சி திரைப்படம் உருவாகியுள்ளது..
 
ரஞ்சித் மெகாலி மீனாட்சி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, விட்டல் ராவ் கதிரவன் புதுப்பேட்டை சுரேஷ் இன்னும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளார்.
 
எழுத்து இயக்கம் வெங்கட் ஜனா, எடிட்டிங் வடிவேல் விமல் ராஜ், ஒளிப்பதிவு சூர்யா காந்தி, இசை சுனில் லாசர், கலை பாபு M பிரபாகர், பாடலாசிரியர் மஷீக் ரஹ்மான், பாடகர் அரவிந்த் கார்ணீஸ் , ஸ்டில்ஸ் மணிவண்ணன், டிசைன் ரெட்டாட் பவன், மக்கள் தொடர்பு வேலு..
 
இறுதி முயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற‌ நிலையில், இறுதி கட்ட பணிகள் முடிவடைந்து விரைவில் படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் வெளியீடு பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோ ஆல்பம்!