Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலைவரே..! வந்து தரையை துடைங்க..! – சூப்பர் ஸ்டாருக்கு சவால் விட்ட மெகா ஸ்டார்!

தலைவரே..! வந்து தரையை துடைங்க..! – சூப்பர் ஸ்டாருக்கு சவால் விட்ட மெகா ஸ்டார்!
, வியாழன், 23 ஏப்ரல் 2020 (10:24 IST)
தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வீட்டு வேலைகள் செய்யும் செலஞ்சுக்கு தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அழைத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் நடிகர்கள் பொழுதுபோகாமல் சில சேலஞ்சுகளை சக நடிகர்களுக்கு விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வீடு துடைத்து, பாத்திரம் கழுவி வீட்டு வேலைகள் செய்வதை வீடியோ எடுத்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்ட தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி,ஆர், இதே போன்று வீட்டு வேலைகள் செய்து வீடியோ வெளியிடும்படி தெலுங்கு ஸ்டார் நடிகர்களான வெங்கடேஷ் மற்றும் சிரஞ்சீவிக்கு சவால் விடுத்துள்ளார்.

இந்த சவாலை ஏற்று வெங்கடேஷ் மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் வீட்டை சுத்தம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள சிரஞ்சீவி இந்த சவாலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் தெலுங்கில் தொடங்கிய இந்த வீடு சுத்தம் செய்யும் சேலஞ்ச் தற்போது தமிழகத்திலும் நுழைந்திருகிறது.

இந்நிலையில் ரஜினி வீட்டுவேலை செய்து வீடியோ வெளியிடுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி கன்னி யாஷிகாவின் கிளாமர் கிளிக்ஸ்...!