Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகர் சசிகலாவுடன் சந்திப்பு !

Advertiesment
பிரபல நடிகர் சசிகலாவுடன் சந்திப்பு !
, வியாழன், 25 பிப்ரவரி 2021 (21:52 IST)
சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் சசிகலாவை இளைய திலகம் நடிகர் பிரபு சந்தித்து பேசியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் சற்று முன் அவர் சென்னைக்கு வருவதற்காகக் பெங்களூரில் இருந்து கிளம்பினார். அவரது வரவால் அதிமுகவில் சில சலசலப்புகள் எழுந்தன. அதிமுகவில் பொறுப்பில் இருக்கும் சிலரே அவருக்கு போஸ்டர்களும் அடித்து ஒட்டினர். அவருக்கு ஆதரவராகச் செயல்படுவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நேற்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சசிகலாவை பலரும் சென்று சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் சீமான், பாரதிராஜா, அமீர் எம்.எல்.ஏ தனியரசு  ஆகியோர் அவரது இல்லத்தில் சென்று சந்தித்தனர். இந்நிலையில் நடிகர் பிரபு திநகரில் வசித்துவரும் சசிகலாவைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

பிரபுவின் அண்ணன் ராம்குமார் சமீபத்தில் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்படியே மடியில தூக்கி வச்சு கொஞ்சனும் - அனிகாவின் கியூட் ஸ்டில்ஸ்!