Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றத்தை அவமதித்த மீராமிதுன்… மீண்டும் கைதா?

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (10:50 IST)
நடிகையும் மாடலுமான மீராமிதுன் சாதி ரீதியாக தமிழ் சினிமா துறையில் இருப்பவர்கள அவதூறு பேசியதற்காக கைது செய்யப்பட்டார்.

நடிகை மீரா மிதுன் கடந்த சில மாதங்களுக்க முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து திடீரென மீராமிதுன் தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர். பின்னர் கேரளாவில் உள்ள ஆலப்புழா என்ற இடத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மீராமிதுன் தங்கியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இப்போது நடக்கும் வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்றைய விசாரணைக்கு ஆஜராகாததை அடுத்து அவரை கைது செய்து ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட "ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு விடைகொடுக்கும் பாடல்… நடிக்கவுள்ள முன்னணி இயக்குனர்கள்!

இயக்குனர் ஷங்கரின் சொத்து முடக்க விவகாரம்… ஆதரவாக வெளியான நீதிமன்ற உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments