Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் , ரஜினி எல்லாரும் பத்திரமா இருந்துகோங்க - வாய்விட்டு வாங்கிக்கட்டும் மீரா மிதுன்!

Advertiesment
விஜய் , ரஜினி எல்லாரும் பத்திரமா இருந்துகோங்க - வாய்விட்டு வாங்கிக்கட்டும் மீரா மிதுன்!
, திங்கள், 13 ஜூலை 2020 (14:51 IST)
கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று தொடர் சிக்கலில் தவித்து வந்தார்.

webdunia

இதையடுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் சர்ச்சையாக பேசி விமர்சனங்களுக்குள்ளாகுவதை வழக்கமான ஒன்றாக வைத்துள்ள மீரா மிதுன், தாது ட்விட்டரில் " தமிழ்நாடு தமிழர்களுக்கு, இந்துகளுக்கானது. ஆனால் மலையாளிகளும், கிறிஸ்தவர்களும் ஆதிக்கம் செலுத்தி ஒரு தமிழ் பெண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள். மதுரையை எரித்த கண்ணகி போன்று எனக்கு கோபம் வந்தால் நானும் தமிழகத்தை எரித்திடுவேன்.

webdunia

மேலும், தமிழ்நாடு அழிந்து கொண்டிருக்கிறது. உங்களை எல்லாம் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நான் பத்திரமாக இருக்கிறேன். கன்னடர் ரஜினிகாந்த், கிறிஸ்தவர் விஜய் ஆகியோர் என் பெயரை கெடுக்க முயற்சி செய்கிறார்கள்? சைபர் புல்லியிங் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன். கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

webdunia

இதனை பார்த்த அனைவரும் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக என்ன தான் ஆனது இந்த மீராவுக்கு... ஏம்மா வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையா திடீர் திடீர் ஏதாவது ஆகிடுமா உனக்கு...? ரஜினி விஜய் பற்றி பேச உனக்கு தகுதி இருக்கிறதா...? முதலில் நீ உன்னை காப்பாற்றிக்கொள் என ஆளாளுக்கு கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

11 ஹோட்டல்களை போலீஸாருக்கு வழங்கிய ரோஹித் ஷெட்டி! – நன்றி தெரிவித்த மும்பை போலீஸ்!