Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்!

மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்!
, செவ்வாய், 23 மே 2023 (14:44 IST)
கருமுத்து தியாகராஜர் - இராதா தம்பதியரின்  மகனான கருமுத்துகண்ணன்  இவர் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி மற்றும் தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகியாகவும் செயல்பட்டுவந்தார். இதேபோன்று தியாகராஜர் நூற்பாலைகளின் தலைவராக இருந்துள்ளார். 
 
இந்நிலையில் ஆன்மீக பணிகள் மீதான ஆர்வத்தால் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்காராகவும் கடந்த 15  ஆண்டுகளுக்கு மேலாக  பதவி வகித்துவந்தார். இவர் தக்காராக இருந்தபோது மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்திகொடுத்தார். தொடர்ச்சியாக மீனாட்சியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது மீனாட்சியம்மன் பட்டாபிஷேகத்தன்று அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்று சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் செங்கோலை சமர்ப்பிக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.
 
உடல்நலக்குறைவு காரணமாக இந்த ஆண்டு மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் கருமுத்து கண்ணன் பங்கேற்வில்லை என்பது குறிப்பிடதக்கது.கருமுத்து கண்ணன் மத்திய அரசின் ஜவுளி குழுத்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். 
 
கடந்த சில வாரங்களாகவே உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் இன்று அதிகாலை 4.50 மணிக்கு வீட்டில் காலமானார். தமிழக அரசின் சார்பில் கருமுத்து கண்ணனுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.
 
இவரது துணைவியாரின் பெயர் உமா. இவருடைய மகன் ஹரி தியாகராஜன்.
 
இந்நிலையில் இவரது உடலானது பொதுமக்களின் அஞ்சலிக்காக மதுரை கோச்சடை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது இந்த நேரத்தில் பிரபலங்கள் ஆன்மிக தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
மதுரையில் உடல்நல குறைவால் உயிரிழந்த மீனாட்சியம்மன் கோவில் தக்கார் மற்றும் தியாகராஜர் குழும தலைவருமான கருமுத்து கண்ணன் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி
 
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்,கனிமொழி‌ எம்.பி. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்
 
மதுரையில் கல்வியாளர் ஜெயபிரகாஷம் காந்தி பேட்டி
 
கருமுத்து கண்ணன் மறைவு கல்வித்துறைக்கு பேரிழப்பு. கல்வித்துறை வளர்ச்சிக்கு கருமுத்து கண்ணன் உதவிகரமாக இருந்துள்ளார். ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்க உதவி புரிந்துள்ளார்  என்றார்.  திமுக மகளிரணி செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அஞ்சலி
 
மதுரை மக்களின் அன்பையும், மரியாதையையும்  பெற்ற திரு கண்ணன் மறைவு ஈடு இணை செய்யமுடியாத இழப்பு.  முன்னாள் முதல்வர் கலைஞர், இன்றைய முதல்வர் என எல்லோருக்கும் நெருக்கமாக இருந்தவர் திரு கண்ணன் மறைவு மிகப்பெரிய அதிர்ச்சி தரக்கூடியது. 
 
பாரம்பரியம், மொழி, கலை, என எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் பங்கேற்று அவற்றின் வளர்ச்சி க்குத்தொண்டாற்றிய ஒருவரின் இழப்பு குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டேஜ்ல என்ன அழகா இருக்காங்க... ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்