Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மயில்சாமி இறப்பு குறித்த வதந்தி: யூடியூப் சேனல்களுக்கு மூத்த மகன் எச்சரிக்கை

Advertiesment
Mayilsamy
, வியாழன், 23 பிப்ரவரி 2023 (17:34 IST)
நடிகர் மயில்சாமி இறப்பு குறித்து ஆதாரம் இல்லாத அவதூறு கருத்துக்களை பரப்பினால் யூடியூப் சேனல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மயில்சாமியின் மூத்த மகன் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் மயில்சாமி கடந்த சில நாட்களுக்கு முன்னால் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார் என்பதும் அவருடைய மறைவு திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே. முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உட்பட பல நடிகர்களும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் மயில்சாமி மரணம் குறித்து சில சர்ச்சை கூறிய கருத்துக்களை யூடியூப் சேனல்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த கருத்துக்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மயில்சாமி மகன் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
சென்னை சாலிகிராமத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மயில் சாமியின் மூத்த மகன் எங்களது அன்பு அப்பா மயில்சாமி குடிப்பதை நிறுத்திவிட்டார் என்றும் தயவுசெய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் தவறான செயல்களை பரப்பினால் யூடியூப் சேனல்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை.....