மண்டேலா என்ற ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன்.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	இந்த படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார்.  சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துக்காக அருண் விஷவா தயாரிக்க மண்டேலா படத்துக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.
 
									
										
			        							
								
																	மாவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங்  நிறைவடைந்த நிலையில்,  படம் ஜுலை 14 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.  தமிழில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
 
									
											
									
			        							
								
																	ஏற்கனவே . ஜுலை 2 அம் தேதிஇப் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியிலேயே பாடல்கள் மற்றும் ஆடியோ வெளியீடும் நடக்கும் என தகவல் வெளியானது.
 
									
			                     
							
							
			        							
								
																	இந்த  நிலையில், வரும் ஜூலை 2 ஆம் தேதி சன்டிவி யூடியூப் சேனலில் மாவீரன் பட டிரைலர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.