Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் படம் மீண்டும் தள்ளி வைப்பு! எப்போது ரிலிஸ் தெரியுமா?

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (15:43 IST)
மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தீபாவளிப் பண்டிகைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலிஸாக இருந்த நிலையில் தற்போது விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் அல்லது டிரைலர் குறித்த அப்டேட்களுக்காக விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, படத்தைப் பற்றிய மாஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் முதல் முறையாக 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக ஐனாக்ஸ் நிறுவனம் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

விஜய் பிறந்தநாள் அன்று ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது லாக்டவுன் முடிய இன்னும் நாள் ஆகலாம் என்பதால் இப்போது மாஸ்டர் ரிலிஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments