Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#WeStandWithMaster: ஒட்டு மொத்த திரைத்துறையும் ஒன்று சேர்ந்த தருணம்!!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (10:44 IST)
#WeStandWithMaster என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. 

 
தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் நேற்று திடீரென 'மாஸ்டர்’ படத்தின் ஒருசில காட்சிகள் இணையத்தில் கசிந்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
 
தயாரிப்பாளர் பிரிட்டோ, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் டுவிட்டர் மூலம் இணையத்தில் பரவி வரும் காட்சிகளை யாரும் பகிர வேண்டாம் என்றும் அந்த காட்சிகள் எங்கிருந்து பகிரப்படுகிறது என்பது குறித்து தகவல் தெரிந்தால் உடனே தங்களுக்கு தெரிவிக்கவும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். 
 
இந்நிலையில் 'மாஸ்டர்’ படத்தை இணையத்தில் கசிய விட்டவர் குறித்த தகவல் தெரியவந்ததாகவும் அந்த நபர் ஒரு தனியார் டிஜிட்டல் சினிமா நிறுவனத்தின் ஊழியர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 
 
இதனிடையே #WeStandWithMaster என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இதில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள சினிமா நடிகர்களின் ரசிகர்களும் மாஸ்டர் பட காட்சிகளை பகிர வேண்டாம் என அன்பு கோரிக்கை வைத்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments