Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுதந்திர தினத்தில் மாஸ்டர் பாடல் ரிலீஸ்? படக்குழுவினரே சொல்லிட்டாங்க!

சுதந்திர தினத்தில் மாஸ்டர் பாடல் ரிலீஸ்? படக்குழுவினரே சொல்லிட்டாங்க!
, செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (12:12 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இவர்களோடு சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதியே வெளியாகவிருந்த இப்படம், கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படம் பொங்கல் தினத்தின் ஸ்பெஷலாக படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர்  படத்தில் இடம் பெற்றுள்ள "Quit பண்ணுடா" எனும் பாடல் வீடியோ  வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தின் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளதாக சென்சார் தகவலுடன் பரவியது. இது குறித்து தெளிவுபடுத்தியுள்ள படக்குழுவினர், " ஆம், சென்சார் ஆனது உண்மை தான், ஆனால் பாடல் வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என கூறி ரசிகர்களை கவலை அடைய செய்துவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோட்ல நின்னு பண்ணு காசு குடுப்பாங்க... கீழ்த்தரமாக நடிகையை விமர்சித்த ரசிகர்!