மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவேண்டும் என்றால் ஷேரில் அதிக சதவீதம் கேட்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.
மாஸ்டர் படம் ரிலீஸானால்தான் மீண்டும் திரையரங்குகளில் கூட்டம் கூடும் என்ற நிலைமை தமிழகத்தில் உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் விஜய் போன்ற பெரிய நடிகரின் படம் ரிலிஸானால் ரசிகர்கள் கட்டாயம் திரையரங்குக்கு வருவார்கள் என்ற நம்பிக்கைதான். அதனால் திரையரங்க உரிமையாளர்கள் மாஸ்டர் படத்துக்கு அதிக திரைகளை ஒதுக்கவும் தயாராக உள்ளனர்.
ஆனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் நீண்ட நாட்களாக படம் கிடப்பில் இருந்ததால் வட்டி எகிறிய காரணத்தால், திரையரங்க உரிமையாளர்களிடம் வரும் வருவாயில் 80-20 சதவீதம் என பங்கு பிரித்து தர வேண்டும் எனக் கேட்டுள்ளார்களாம். வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்களுக்கு 60 சதவீதம் வரைதான் கொடுக்கப்படும். ஆனால் மாஸ்டர் தயாரிப்பாளர்கள் 80 சதவீதம் வரை கேட்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு சம்மதித்து மாஸ்டர் ரிலீஸின் பின் ஒருவாரத்துக்கு பின் வேறு எந்த திரைப்படமும் ரிலீஸ் செய்யாமல் இருந்தால் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாராக் உள்ளனராம். இதற்கெல்லாம் திரையரங்க உரிமையாளர்கள் சம்மதித்தாலும் மல்ட்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சம்மதிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.