Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மை கதை தான் மாஸ்டர் - பிரபலம் சொன்ன சீக்ரெட் !

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (14:29 IST)
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி சென்று விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என நம்பகுந்த வட்டாரத்தில் செய்திகள் வெளிவந்தது.
 

இந்நிலையில் தற்போது இப்படத்தின்  இணை எழுத்தாளர்களில் ஒருவரான பொன் பார்த்திபன் பேட்டி ஒன்றில் மாஸ்டர் படம் குறித்த ருசிகர தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதவது, படத்தின் இயக்குனர் லோகேஷ் கங்கராஜ், நிஜ வாழ்க்கையில் தான் சந்தித்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது தான் "மாஸ்டர்" என்று கூறியுள்ளார். வித்யாசமான கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் நிறைய ட்விஸ்ட் கொண்டிருப்பதாகவும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments