Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் ‘குட்டிக்கதை’யை கேட்க வேண்டுமா? பிப்ரவரி 14ல் ரிலீஸ்!

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (07:59 IST)
விஜய்யின் ‘குட்டிக்கதை’யை கேட்க வேண்டுமா?
விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இன்னும் கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே மீதம் இருப்பதாகவும் அதுவும் அடுத்த வாரம் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர்களிடமிருந்து தகவல் வெளிவந்துள்ளது
 
இதனை அடுத்து இந்த படம் ஏப்ரலில் ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முதல் படியாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
 
’ஒரு குட்டி கதை’ என்று தொடங்கும் இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ’மாஸ்டர்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் அறிவிப்பு சமூக வலைதளங்களில் உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தளபதி விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு குட்டிக் கதையை கூறுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அவருடைய படத்தின் பாடலே ஒரு குட்டி கதை என்று ஆரம்பிக்க உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த குட்டி கதையை கேட்க ரசிகர்கள் இன்னும் இரண்டு நாள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் கடந்த சில வருடங்களாக விஜய், தான் நடித்து வரும் படத்தில் ஒரு பாடலை பாடி வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த குட்டிக்கதை பாடலையும் அவர்தான் பாடியிருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments