மாஸ்டர் படம் திரையரங்குகள் மூலமாக டிக்கெட் கட்டணமின்றி மற்ற கட்டணங்கள் மூலமாக 75 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் முதல் முறையாக இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியானது. தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் மாஸ்டர் திரைப்படம் இந்தியில் படுதோல்வி என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வாரவிடுமுறை முடிந்துள்ள நிலையில் பல திரையரங்குகளில் மாஸ்டர் படத்தின் வசூல் குறைய ஆரம்பித்துள்ளது. ஆனாலும் மாஸ்டர் படத்துக்காக அதிக தொகை செலவு செய்துள்ளதால் மேற்கொண்டும் மாஸ்டர் படத்தையே ஓட்ட திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாஸ்டர் படம் ரிலீஸானதில் இருந்து திரையரங்குகள் மூலமாக டிக்கெட் கட்டணமின்றி பார்க்கிங் கட்டணம், கேண்ட்டின் வசூல் மற்றும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்களின் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.