தமிழில் வெளியாகி ஹிட் அடித்த விஜய்யின் மாஸ்டர் படம் இந்தியில் ரீமேக் ஆவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் மாஸ்டர். சமீபத்தில் திரையரங்கிலும், ஓடிடியிலும் வெளியான இந்த படம் பெரும் வரவேற்பையும், வசூல் சாதனையையும் படைத்தது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை எண்டமோல் ஷைன் மீடியா என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் விரைவில் மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் தொடங்கும் என கூறப்படும் நிலையில் யார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படமும் இந்தியில் ரீமேக்காகி வருவது குறிப்பிடத்தக்கது.