Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'’மாஸ்டர்’’ பட 3 வது ப்ரோமோ வீடியோ ரிலீஸ்...ரசிகர்கள் மகிழ்ச்சி...

Advertiesment
'’மாஸ்டர்’’ பட 3 வது ப்ரோமோ வீடியோ ரிலீஸ்...ரசிகர்கள் மகிழ்ச்சி...
, வியாழன், 7 ஜனவரி 2021 (18:10 IST)
விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் தற்போது,மாஸ்டர் படத்தில் 3 வது புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வரும் ஜனவரி 13 ஆம் தேதி இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதாகப் படக்குழு தெரிவித்த நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையேற்ற தமிழக அரசு சமீபத்தில் திரையரங்கில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த சினிமா துறையினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், மாஸ்டர் படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதால் ஏற்கனமே சிட்டி ஸ்டோரி, பாடல் வெளியாகி வைரலான நிலையில், இன்று மாலை 7 மணிக்கு மாஸ்டர் ரெய்ட் பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்தனர்.

மேலும், விஜய்யின் மாஸ்டர் படத்தின் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் சில்நாட்களுக்கு முன் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதேசமயம் இப்பாடலின் வீடியோ பிரமோவை படக்குழு வெளியிட்டது.

 அதேபோல் நேற்று மாலை மாஸ்டர் படத்தில் 2 வது வீடியோ புரோமோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது இப்படத்தயாரிப்பு நிறுவனம். விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தில் அவரது குரலைக் கேட்டு உற்சாகமடைந்துள்ளனர். சென்ற வருடத்தில் அவரது படம் எதுவும் கொரொனா கால ஊரடங்கினால் ரிலீசாகாத நிலையில் இவ்வருடத்தில் மிகப்பெரிய ஹிட் படமாக மாஸ்டர் இருக்க வேண்டி ரசிகர்கள் முடிவெடித்துள்ளனர்.

இந்நிலையி தற்போது மாஸ்டர் படத்தில் விஜய் மாணவர்களுடன் அமர்ந்து பேசுவதுபோல ஒருபுகைப்படமும் மற்றொரு புகைப்படத்தில் நிறைய புத்தகங்களுடன் ஒரு பூனைக்குட்டி பக்கத்தில் அமர்ந்து கேம் விளையாடுவதுபோலவும் உள்ளது.

இந்நிலையில் தற்போது, மாஸ்டர் படத்தின் 3 வது புரோமோ வை வெளியிட்டுள்ளது படக்குழு.

இதில் கல்லூரியில் பேராசிரியரான விஜய் கெத்தாக நடந்துவருவதுபோன்ற காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர். வீடியோ வைரலாகி வருகிறது.

பொங்கலுக்கு மாஸ்டர் கட்டாயம் ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் சிறப்புக் காட்சிகளுக்குத் தங்களை ஆயத்தம் செய்து வருகின்றனர்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டாரின் பட புதிய போஸ்டர் ரிலீஸ்…இணையத்தில் வைரல்