Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'அன்றைக்கும் இன்றைக்கும் மாஸ் ஹீரோ அண்ணன் விஜயகாந்த்''- விஜய்யின் வீடியோ வைரல்

vijayakanth -vijay
, வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (13:35 IST)
நடிகர் விஜய், பிரபல நடிகர் விஜயகாந்தைப் பற்றியும் அவரது ரசிகர்களின் பலத்தையும் தான் சினிமாவில் அவர் மூலம் அறிமுகமானதைப் பற்றி அவரே கூறிய ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் 80, 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த்.  இவர், கடந்த  2005 ஆம் ஆண்டு மதுரையில் தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார்.

.அரசியலில் தூய்மை, நாணயம், மனிதநேயம் ஆகியவற்றை கடைப்பிடித்து, கடைக்கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டுமென்பதை கட்சியின் கொள்கைகளில்  ஒன்றாகவுள்ளது.

விஜய்காந்த்  முன்பு போன்று ஆக்டிக்வாக இல்லை. அவர் உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இன்று அவரது 71 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் தன் கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை நேரில் சந்திக்கிறார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமாதுறையினர் மற்றும் ரசிகர்கள்  வாழ்த்து வருகின்றனர்.

நடிகர் விஜய், விஜயகாந்தைப் பற்றியும் அவரது ரசிகர்களின் பலத்தையும் தான் சினிமாவில் அவர் மூலம் அறிமுகமானதைப் பற்றி அவரே கூறிய ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், ‘’கிளாஸ் ஆடியன்ஸ் மாஸ் ஆடியன்ஸ்ன்னு ரெண்டு பேரு இருக்காங்க. இதுல மாஸ் ஆடியன்ஸ் இருக்காங்க…அவுங்க ஒரு  நடிகரை நடிகராக ஒத்துக்கொள்ள வேண்டும். அது ரொம்ப ரொம்ப முக்கியம். அதனால், அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி ஒரு பெரிய ஹீரோ அண்ணன் விஜயகாந்த் அவர்கள். அவரை வைத்து என் அப்பா ( எஸ்.ஏ,சந்திரசேகர்) ஒரு படம் எடுக்கும்போது,. அதில் அவருக்கு தம்பியாக  என்னை நடிக்க வைத்தார்கள், விஜயகாந்த் சாரை பார்க்க வரும் ஆடியன்ஸுக்கு அப்படம் ( செந்தூரப்பாண்டி) மூலம் நான் அறிமுகமாகினேன். இதற்காகத்தான் பண்ணியது, அப்படம் வெற்றிபெற்றது’’ என்று கூறியுள்ளார்.

1998 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடிகர் விஜய் பேட்டியளித்த இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜா இசையில், விஜயகாந்த் மகன் நடிக்கும் புதிய பட தலைப்பு !