மருத்துவ முத்தம் ஸ்பெஷலிஸ்ட்டின் "மார்கெட் ராஜா MBBS டீசர் "!

வெள்ளி, 12 ஜூலை 2019 (18:51 IST)
ஆரவ் நடிப்பில் உருவாகியுள்ள மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.


 
காதல் மன்னன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அமர்க்களம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய சரண் கடைசியாக ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கியிருந்தார். வினய் நடித்திருந்த இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
 
பின்னர் மிகப்பெரிய கேப் விழுந்துட்டதையடுத்து தற்போது பிக்பாஸ் ஆர்வ்வை வைத்து மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஆர்வ்வுடன் ராதிகா சரத்குமார், காவ்யா தாப்பர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
 
சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்களிடையே ஒருவித இம்பேக்டை ஏற்படுத்தினர். அதனையடுத்து தற்போது இப்படத்தின் டீஸர் வெளிவந்துள்ளது. இதில்  ராதிகா ரவுடியாகவும், அவரிடம் பணிபுரியும் நபராக ஆரவ் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட கவின் - கொண்டாடிய ஹவுஸ்மேட்ஸ் -வீடியோ!