Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தில் சர்ப்ரைஸாக இணைந்த செல்வராகவன்!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (09:54 IST)
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விபத்துக்குள்ளானது. கிரேன் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து படப்பிடிப்புத் தளத்துக்குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து பட குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.

இந்நிலையில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் செல்வராகவன் இனைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தில் அவர் சிரஞ்சீவி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நேற்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இதைப் படக்குழு அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இவருக்கும் அவரது மாமியாருக்கும் ஒரே வயது.! பிரேம்ஜியை கலாய்த்த பிரபலம்.!!

இப்படி திருடிதான் படம் எடுக்கணுமா? – கல்கி 2898 படக்குழு மீது ஹாலிவுட் கிராபிக் டிசைனர் புகார்!

இளையராஜாவுக்கு பாடல்கள் மீது எந்த உரிமையும் கிடையாது! – எக்கோ நிறுவனம் நீதிமன்றத்தில் வாதம்!

வித்தியாசமான உடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யா துரைசாமியின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments