மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் கதாநாயகன் ஆக அறிமுகம் ஆகிறாரா இன்பன் உதயநிதி?

vinoth
வியாழன், 9 அக்டோபர் 2025 (09:07 IST)
தமிழ் சினிமாவுக்கும் முதல்வர் மு க ஸ்டாலினின் குடும்பத்துக்கும் எப்போதுமே நெருக்கமான உறவு இருந்து வந்துள்ளது. கலைஞர் கருணாநிதி அரசியலில் தீவிரமாக செயல்பட்ட அதே நேரத்திலேயே சினிமாவிலும் இயங்கி வந்தார். அதே போல மு க ஸ்டாலின் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில படங்களில் நடித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் செயல்பட்டார். தற்போது துணை முதல்வர் ஆனதும் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அவரின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் பொறுப்பை அவரது மகன் இன்பன் உதயநிதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதையடுத்து அவர் நடிகராக அறிமுகமாவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. அதன்படி அவர் நடிக்கும் படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாகவும் ‘பைசன்’ ரிலீஸுக்குப் பிறகு அந்த படம் தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமன்னாவின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படத் தொகுப்பு!

மாளவிகா மோகனின் வித்தியாச உடை போட்டோஷூட் ஆல்பம்!

உருவாகிறது ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’… ஹீரோ சாண்டி மாஸ்டரா?

அஞ்சான் ரி ரிலீஸில் சிறு மாற்றம்… புது வெர்ஷனைப் பார்த்த பிரபலங்கள்!

எனக்கு அது மட்டும்தான் பிரச்சனை… மதங்கள் குறித்து ஏ ஆர் ரஹ்மான் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments