Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 26 April 2025
webdunia

வாழை படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாரி செல்வராஜுக்கு இத்தனை கோடி லாபமா?

Advertiesment
மாரி செல்வராஜ்

vinoth

, வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (11:14 IST)
தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படம்  கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது. இந்த படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார். படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது.

வெளியானது முதல் வாழை திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் ரசிகர்கள் உணர்ச்சி ரீதியாக உடைந்துவிடும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் படம் பார்த்த பலரும் வெளிவரும் அழுதுகொண்டே வெளியே வந்தனர். ரசிகர்களின் பாராட்டு வார்த்தைகளால் படத்துக்கு வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது. மூன்றாவது வாரத்திலும், கோட் ரிலீஸுக்குப் பின்னரும் கணிசமான தியேட்டர்களில் இந்த படம் ஓடிவருவதே இதன் வெற்றியை கோடிட்டு காட்டுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை முதல் காப்பி அடிப்படையில் தயாரித்தது மற்றும் திரையரங்கில் வெளியிட்டது ஆகியவற்றின் மூலம் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் லாபமாகக் கிடைத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறு முதலீட்டில் முன்னணி நடிகர்கள் இல்லாமல் ஒரு படத்தை உருவாக்கி இவ்வளவு பெரிய வெற்றியை வாழை திரைப்படம் ஈட்டியிருப்பது திரையுலகில் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரையுலகில் ஐம்பது ஆண்டுகள் நிறைவு… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க ஆசைப்படும் ரஜினி!