உங்கள் படங்கள் அழுத்தமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன – மாரி செல்வராஜைப் பாராட்டிய தினேஷ் கார்த்திக்!

vinoth
வெள்ளி, 28 நவம்பர் 2025 (10:26 IST)
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக ‘பைசன்’நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. பத்து நாட்களில் உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள ‘பைசன்’  படத்துக்கு வெவ்வேறு தளங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ‘பைசன்’ படத்தைப் பாராட்டியுள்ளார். அதில் “பைசன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்ன ஒரு அருமையா திரைப்படம்.  மாரி செல்வராஜ் உங்களின் படைப்புகள் அழுத்தமாகவும், பெரும் தாக்கத்தை உருவாக்குபவையாகவும் உள்ளன.  துருவ் கடுமையாக உழைத்துள்ளார். அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.” எனப் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்பி சௌத்ரிக்கே தண்ணி காட்டியவர் ராஜகுமாரன்.. இப்படிலாம் நடந்துருக்கா?

காதலுக்காக ஒரு மனிதன் எவ்வளவு தூரம் செல்வான்?... தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ எப்படி?- ரசிகர்கள் விமர்சனம்!

கைவிடப்பட்டதா ஜூனியர் NTR-ன் தேவரா 2… அடுத்த கதைக்கு நகர்ந்த இயக்குனர்!

Stranger things வெளியானதும் முடங்கிய நெட்பிளிக்ஸ் தளம்!

உங்கள் படங்கள் அழுத்தமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் உள்ளன – மாரி செல்வராஜைப் பாராட்டிய தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments