மீண்டும் இணையும் மாரி செல்வராஜ்- ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி.. எந்த படத்தில் தெரியுமா?

vinoth
திங்கள், 21 ஏப்ரல் 2025 (08:27 IST)
தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ மற்றும் வாழை என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குனராக உருவாகியுள்ளார் மாரி செல்வராஜ். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான ‘வாழை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. படத்தில் முன்னணி நடிகர்கள் இல்லாத போதும் அந்த படம் திரையரங்குகள் மூலமாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தற்போது துருவ் விக்ரம் மற்றும் அனுபமா நடிப்பில் ‘பைசன்’ படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இதையடுத்து அவர் தனுஷ் நடிப்பில் உருவாகும் அவரின் ஐம்பத்து அறாவது படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ படத்துக்கு ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முடிவுக்கு வந்தது 'ஹார்ட் பீட் - 2' .. மூன்றாம் பாகம் உண்டா?

பிக் பாஸ் 9: இந்த வாரம் சிறைக்குச் சென்ற போட்டியாளர்கள் யார் யார்?

லோகா ஓடிடி குறித்து அறிவித்த ஜியோ ப்ளஸ் ஹாட்ஸ்டார்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

புதுப்பேட்டை 2 பாதி முடிஞ்சது… ஆயிரத்தில் ஒருவன் 2…?- செல்வராகவன் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments