Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்சூர் அலிகானை கண்டித்த நீதிபதி.. ஜாமீன் மனு திடீர் வாபஸ்..!

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2023 (14:01 IST)
நடிகை த்ரிஷா விவகாரத்தில் முன் ஜாமீன்  கோரி நடிகர் மன்சூர் அலிகான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் திடீரென அவர் தனது மனுவை வாபஸ் செய்துள்ளார். நீதிபதியின் கண்டிப்புக்கு காரணமாக அவர் வாபஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை த்ரிஷா மீது அவதூறாக பேசியதாக காவல்துறையினர்  மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.  

இந்த நிலையில் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்த போது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்பதற்கு பதிலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை தவறுதலாக தனது மனுவை சேர்த்து உள்ளது தெரிய வந்தது. இதனை அடுத்து மன்சூர் அலிகான் தரப்பு மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தபோது நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல, நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நீதிபதி எஸ் அல்லி கண்டித்தார்

இதையடுத்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்ன செய்யப் போகிறாய் என்று கமல் சார் கேட்பார்?... தக் லைஃப் இசையமைப்பு அனுபவம் பகிர்ந்த ARR!

சூர்யாவின் ரெட்ரோ பட டிரைலரை உருவாக்கியது இந்த இயக்குனர்தானா?... வெளியான தகவல்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூரியின் அடுத்த படத்துக்கு வித்தியாசமான தலைப்பு… கவனம் ஈர்க்கும் முதல் லுக் போஸ்டர்!

நாயகன் படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் இணையாதது தவறு- மனம் திறந்து பேசிய கமல்ஹாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments