Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் தான் த்ரிஷா மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும்: நடிகர் மன்சூர் அலி கான் பேட்டி

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (10:34 IST)
நடிகை த்ரிஷா என்னுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நான் தான் அவர் மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என நடிகர் மன்சூர் அலி கான் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. என்னிடம் விளக்கம் கேட்காமலேயே தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. மக்களுக்கு நான் யார் என்பது தெரியும்.

பாஜகவை சேர்ந்த எஸ்.வி. சேகர் பெண்களை பற்றி மிகவும் அவதூறாக பேசினார். அது தொடர்பாக எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, நீட் தேர்வால் அனிதா என்ற மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட போது எந்த மகளிர் சங்கமும் போராடவில்லை.

நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையை 4 மணி நேரத்தில் உடனடியாக திரும்பப் பெற வேண்டும், என்னிடம் முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும், எல்லோரையும் உசுப்பேற்றி விட்டு எனக்கு எதிராக பேச வைக்கிறார்கள். லோகேஷ் கனகராஜுக்கு இந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாது.

நடிகை த்ரிஷா குறித்து தவறாக நான் எதுவும் பேசவில்லை’ என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments