Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு நினைத்து பார்க்க முடியாத போராட்டங்களை நடத்துவேன்; கொந்தளித்த மன்சூர் அலிகான்

Advertiesment
அரசு நினைத்து பார்க்க முடியாத போராட்டங்களை நடத்துவேன்; கொந்தளித்த மன்சூர் அலிகான்
, திங்கள், 18 செப்டம்பர் 2017 (17:22 IST)
விவசாயிகளை கண்டுகொள்ளாவிட்டால் அரசு நினைத்து பார்க்க முடியாத போராட்டங்களை நடத்துவேன் என மன்சூர்அலிகான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 

 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
 
சமீபத்தில் நான் கதிராமங்கலம், நெடுவாசல், கீழடி போன்ற இடங்களில் என்னதான் நடக்கிறது என்பதை பார்பதற்காக நேரடியாக சென்றேன். அங்கே பச்சை பசேல் என்ற இயற்கை சார்ந்த விவசாயத்தையும், வேலை செய்ய முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் விவசாய மக்களையும் கண்டு அதிர்ச்சியுற்றேன்.
 
இந்த பசுமை இன்னும் சில வருடங்களில் பாலைவனமாகிவிடும். எண்ணெய் நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்பால் மக்கள் குடிநீரைக் கூட சுத்தமாக குடிக்க முடியாமல் இருக்கிறார்கள். டெல்லியிலும், இங்கும் போராடும் விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பது நாளைய தமிழகத்திற்கு நல்லதல்ல. 
 
விவசாயிகளுக்குத் தான் இந்த அரசு என்று சொல்லும் மோடி அரசு, காவேரி மேலாண்மையும் அமைக்கவிடாமல் நீதிமன்றத்தை மிரட்டியதோடு அல்லாமல், தமிழக ஏழை விவசாயிகளுக்கு கடன் சுமையை தள்ளுபடி செய்யாமல் கார்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகள் செய்கிறார்.
 
இனியும் தமிழரை நாலாந்திர குடிமக்களாக மத்திய அரசு நடத்தினால் அதிரடியாக நான் நேரில் இறங்கி இந்த அரசு நினைத்து பார்க்க முடியாத போராட்டங்களை நடத்துவேன். இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்சூர் அலிகான் தனது அறிக்கையில் கூறி உள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெஜினாவை வெளியேற்றி, என்ட்ரி கொடுத்த ரம்யா நம்பீசன்!!