Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீரோவுக்குள் ஒலிந்துகொள்ளும் அசோக் செல்வன்… வெளியான மன்மத லீலை sneak peek!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (10:17 IST)
மன்மதலீலை படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு. இதனால் வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்த படம் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் வா கணக்கு என்ற பாடலின் லிரிக் வீடியோ ஆகியவை வெளியாகி இளைஞர்களைப் பெரிய அளவில் கவர்ந்துள்ளன. படத்துக்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  இதையடுத்து இப்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. கணவனுக்கு தெரியாமல் அசோக் செல்வனோடு தனிமையில் சம்யுக்தா இருக்கையில் திடீரென்று அவர் வந்துவிடவே எப்படி அவர் சமாளிக்கிறார் என்பது போல உருவாகியுள்ள இந்த காட்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிரடி மாற்றங்களுடன்..! கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11

2025ஆம் ஆண்டை மிஸ் செய்த கார்த்தி ரசிகர்கள்.. ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை..!

தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியாவிலேயே வேண்டாம்.. வெளிநாட்டில் ‘ஜனநாயகன்’ ஆடியோ ரிலீஸ் விழா?

பொங்கலுக்கு ‘பராசக்தி’ ரிலீஸ் உறுதி.. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதல் இல்லை..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments