Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாட்டிக்காதவரை எல்லோரும் ராமர்தான்… வெங்கட்பிரபுவின் எக்குதப்பான மன்மதலீலை டிரைலர்!

மாட்டிக்காதவரை எல்லோரும் ராமர்தான்… வெங்கட்பிரபுவின் எக்குதப்பான மன்மதலீலை டிரைலர்!
, செவ்வாய், 22 மார்ச் 2022 (09:34 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் மன்மதலீலை திரைப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு. இதனால் வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இந்நிலையில் அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியானது. மன்மதலீலை என்ற தலைப்பில் ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் பாலசந்தர் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் பெயருக்கேற்றவாறு 18+ விஷயங்களை மிக அதிகமாகவே சேர்த்துள்ளாராம் வெங்கட் பிரபு. படத்தின் கதாநாயகனின் வாழ்க்கையில் இருவேறு கால கட்டங்களில் நடக்கும் கதைக்களத்தை வைத்து உருவாக்கியுள்ளாராம். ஏற்கனவே வெளியான போஸ்டர்களும் டீசரும் இளைஞர்களைக் கவர, இப்போது புதிய டிரைலரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. எதிர்பார்த்தது போலவே நிறைய 18+ விஷயங்கள் காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளன. வெளியானதில் இருந்து இந்த டிரைலர் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் ஷாலினி ரொமாண்டிக் போட்டோ… இணையத்தில் வைரல் ஹிட்!