மீண்டும் இணையும் மங்காத்தா டீம்… அஜித்துடன் பேச்சுவார்த்தை!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (16:07 IST)
அஜித் நடிப்பில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு உருவான திரைப்படம் மங்காத்தா. அஜித்தின் 50 ஆவது படமான மங்காத்தாவை அதுவரை தனது குழுவினரோடு சிறிய படங்களை இயக்கி வந்த வெங்கட்பிரபு பிரம்மாண்டமாக உருவாக்கினார். அப்போது 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் 80 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இன்றளவும் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படமாக உள்ளது.

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வெளியான இந்த படம் சமீபத்தில் 11 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் துரை தயாநிதி அஜித்தின் குடும்ப நண்பராக இருந்து வருகிறார்.

மங்காத்தா படத்தின் போதே அவர் அஜித்தோடு மீண்டும் ஒரு படத்தில் இணைவதாக இருந்ததாம். ஆனால் அது இப்போதுவரை கைகூடவில்லை. இந்நிலையில் இப்போது மீண்டும் அஜித்தை வைத்து படம் தயாரிக்க துரை தயாநிதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments