Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த படம் அந்த ஹீரோவுடனான… வதந்திகளுக்குப் பதிலளித்த மணிரத்னம்!

vinoth
புதன், 28 மே 2025 (11:56 IST)
பல ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலமாக ஒரு கமர்ஷியல் வெற்றியை ருசித்தார் மணிரத்னம். அதன் பிறகு இப்போது அவர் கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகும் நிலையில் தற்போது விறுவிறுப்பாக ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மணிரத்னம் அடுத்து தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி மற்றும் கன்னட நடிகை ருக்மினி வசந்த் ஆகியோர் நடிப்பில் ஒரு காதல் கதையை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் அதை மணிரத்னம் தற்போது மறுத்துள்ளார். சமீபத்தில் தக் லைஃப் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய அவர் “அடுத்து ஒரு படம் பண்ணுகிறேன். ஆனால் அது நவீன் பொலிஷெட்டி படம் இல்லை. நிறையக் கதைகளில் பணியாற்றி வருகிறேன். அதில் எது அடுத்த படம் என்பது தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்கும் சூர்யா… செம்ம சர்ப்ரைஸ் காத்திருக்கு!

‘கமல் சார் 58 நிமிடம் பேசுவார்.. நான் 2 நிமிடம் பேசுவேன்’ – நக்கல்யா மணிரத்னத்துக்கு!

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் எப்பதான் ரிலீஸ் ஆகும்?,.. பணிகளை முடுக்கிவிடும் படக்குழு!

மணிரத்னம், கமல்ஹாசன் 2 பேருமே சீனியர்கள்.. இளைய தலைமுறை ரசிகர்களை ஈர்க்குமா ‘தக்லைஃப்’?

தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது… தக் லைஃப் ப்ரமோஷனில் கமல் பேச்சு – கர்நாடகாவில் எழுந்த எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments