Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நக்கலைட்ஸ் குழுவினரோடு மணிகண்டன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு அப்டேட் இதோ!

vinoth
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (07:46 IST)
தமிழ் யுட்யூப் சேனல்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்று நக்கலைட்ஸ். இவர்கள் வெளியிடும் அரசியல் நய்யாண்டி வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலம். ஏற்கனவே இந்த சேனலில் இருந்து தனம் அம்மாள், பிரசன்னா, உள்ளிட்ட நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார்கள்.

இந்நிலையில் இப்போது இந்த குழுவினர் இணைந்து உருவாக்கும் படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவரோடு முக்கியக் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார். இந்த படத்தில் மேக்னா சான்வே கதாநாயகியாகவும் , இயக்குனர் சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம், தனம் அம்மா, பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், நிவேதிதா, அனிருத் ஆகியோர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்துக்குப் பிரசன்னா பாலச்சந்திரன் கதை, திரைக்கதை எழுத ராஜேஸ்வர் இயக்குகிறார். சுஜித் ஒளிப்பதிவு செய்ய கண்ணன் பாலு படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்துக்கு    ‘குடும்பஸ்தன்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments