Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் பெற்ற வரவேற்பை அடுத்து மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் ‘குடும்பஸ்தன்’!

vinoth
வியாழன், 30 ஜனவரி 2025 (10:15 IST)
தமிழ் யுட்யூப் சேனல்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்று நக்கலைட்ஸ். இவர்கள் வெளியிடும் அரசியல் நய்யாண்டி வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலம். இந்நிலையில் அவர்களின் அடுத்த கட்ட பாய்ச்சலாக ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவரோடு முக்கியக் கதாபாத்திரங்களில் குரு சோமசுந்தரம் மேக்னா சான்வே கதாநாயகியாகவும், இயக்குனர் சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம், தனம் அம்மா, பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், நிவேதிதா, அனிருத் ஆகியோர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ராஜேஷ்வர் இயக்கியுள்ளார்.

இந்த படம் வெளியாகி தமிழகத்தில் பெரிய வெற்றி பெற்றுள்ளதை அடுத்து தற்போது மலையாளத்தில் டப் ஆகி ஜனவரி 31 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது. இதைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நம்மவர் போன்ற தலைவரை தமிழ்நாடு தவறவிட்டது… மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய நடிகை!

பூஜா ஹெக்டேவின் முத்தக் காட்சிக்கு சென்சார் அதிகாரிகள் ஆட்சேபம்…!

நாடாளுமன்ற உறுப்பினரான பின்னர் மீண்டும் தமிழ்ப் படத்தில் கங்கனா!

‘விஜய் அழைத்தாலும் அவர் கட்சியில் சேரமாட்டேன்’… நடிகர் பார்த்திபன் அளித்த பதில்!

ஆங்கிலத்திலும் உருவாகிறதா ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments