Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிடில் க்ளாஸ் ‘குடும்பஸ்தன்’ ஆக மணிகண்டன்… இன்று வெளியாகும் டிரைலர்!

vinoth
சனி, 18 ஜனவரி 2025 (09:42 IST)
தமிழ் யுட்யூப் சேனல்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்று நக்கலைட்ஸ். இவர்கள் வெளியிடும் அரசியல் நய்யாண்டி வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலம். ஏற்கனவே இந்த சேனலில் இருந்து தனம் அம்மாள், பிரசன்னா, உள்ளிட்ட நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார்கள்.

இந்நிலையில் இப்போது இந்த குழுவினர் இணைந்து உருவாக்கும் குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவரோடு முக்கியக் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார். இந்த படத்தில் மேக்னா சான்வே கதாநாயகியாகவும், இயக்குனர் சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம், தனம் அம்மா, பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், நிவேதிதா, அனிருத் ஆகியோர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சமீபத்தில் பாடல் ஒன்று ரிலீஸாகி கவனம் பெற்றது.

இதையடுத்து இன்று படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் ஜனவரி 24 ஆம் தேதி  ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாபன் போல மிடில் க்ளாஸ் மக்களின் பொருளாதார சிக்கலைப் பேசும் படமாக இது இருக்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நம்மிடம் காசு, பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும்… தனுஷ் கருத்து!

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

அடுத்த கட்டுரையில்
Show comments