மிடில் கிளாஸ் இளைஞன் பரிதாபங்கள்… கவனம் ஈர்க்கும் மணிகண்டனின் ‘ஸீரோ பேலன்ஸ் ஹீரோ’ பாடல்!

vinoth
சனி, 14 டிசம்பர் 2024 (07:49 IST)
தமிழ் யுட்யூப் சேனல்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்று நக்கலைட்ஸ். இவர்கள் வெளியிடும் அரசியல் நய்யாண்டி வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலம். ஏற்கனவே இந்த சேனலில் இருந்து தனம் அம்மாள், பிரசன்னா, உள்ளிட்ட நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார்கள்.

இந்நிலையில் இப்போது இந்த குழுவினர் இணைந்து உருவாக்கும் குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவரோடு முக்கியக் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார். இந்த படத்தில் மேக்னா சான்வே கதாநாயகியாகவும் , இயக்குனர் சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம், தனம் அம்மா, பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், நிவேதிதா, அனிருத் ஆகியோர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான ‘ஸீரோ பேலன்ஸ் ஹிரோ” வெளியாகியுள்ளது. வைஸாக் இசை மற்றும் வரிகளில் ஷான் ரோல்டன் இந்த பாடலைப் பாடியுள்ளார். ஒரு மிடில் கிளாஸ் இளைஞன் சந்திக்கும் பொருளாதார இக்கட்டுகளை நகைச்சுவையோடு சொல்லும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

கமல் ஒன்னும் பெரிய நடிகர்லாம் இல்லை… தேவயானியின் கணவர் ராஜகுமாரன் சர்ச்சைக் கருத்து!

அஜித் 64 படம் தொடங்குவது எப்போது?... ஆதிக் கொடுத்த அப்டேட்.!

அட்லி& அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங் இவ்வளவு முடிந்து விட்டதா? நடிகை கொடுத்த அப்டேட்.!

அடுத்த கட்டுரையில்
Show comments