தமிழ் யுட்யூப் சேனல்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்று நக்கலைட்ஸ். இவர்கள் வெளியிடும் அரசியல் நய்யாண்டி வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலம். இந்நிலையில் அவர்களின் அடுத்த கட்ட பாய்ச்சலாக குடும்பஸ்தன் திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவரோடு முக்கியக் கதாபாத்திரங்களில் குரு சோமசுந்தரம் மேக்னா சான்வே கதாநாயகியாகவும், இயக்குனர் சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம், தனம் அம்மா, பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், நிவேதிதா, அனிருத் ஆகியோர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ராஜேஷ்வர் இயக்கியுள்ளார்.
இந்த படம் வெளியாகி தமிழகத்தில் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் படம் வெளியாகி 8 நாட்களில் 12.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.