Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பொன்னியின் செல்வனுக்கு’’ மணிரத்னம் வரச்சொன்னார்….முன்னணி நடிகர் டுவீட்

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (16:40 IST)
மணிரத்னத்தின் கலைவண்ணமாக ‘பொன்னியின் செல்வன்’. 5am படபிடிப்புக்கு வரச்சொன்னார்கள் என்றுநடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு  டுவீட் பதிவிட்டுள்ளார்.

 பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். ஆனால் சில பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இதையடுத்து படப்பிடிப்புக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் ஐதராபாத்தில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்த உள்ளார் மணிரத்னம். ஜனவரி 6 ஆம் தேதி முதல் அனைத்து நடிகர்களையும் ஒருங்கிணைத்து நடக்கும் படப்பிடிப்பில் பெருவாரியான படப்பிடிப்புகளை எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர் மற்றும் நடிகருமான பார்த்திபன் தனது ஸ்டைலில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், காலை வணக்கம்!கல்கியின் கைவண்ணம் மணிரத்னத்தின் கலைவண்ணமாக ‘பொன்னியின் செல்வன்’. 5am படபிடிப்புக்கு வரச்சொன்னார்கள்.5-ஆம் மாடியிலிருந்து என்னை 4.47-க்கு மின்தூக்கி இறக்கிக் கொண்டிருக்க சிப்பந்தி ஒருவர் “எங்கம்மா உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க நீங்க ஒரு ஞானின்னு” 20 வருடங்களுக்கு conti எனப் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகர் பார்த்திபன் சோழனாக வாழ்த்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தில் பார்த்திபன் தனது திறமையாக வெளியிடுவார் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments