Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு பாகம் மட்டும்தான் திரைப்படம் …. மத்ததெல்லாம் வெப் சீரிஸ் – மணிரத்னத்தின் மெஹா திட்டம் !

Advertiesment
ஒரு பாகம் மட்டும்தான் திரைப்படம் …. மத்ததெல்லாம் வெப் சீரிஸ் – மணிரத்னத்தின் மெஹா திட்டம் !
, செவ்வாய், 31 டிசம்பர் 2019 (18:40 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை முதல்பாகம் மட்டும் திரைப்படமாகவும் மற்றவற்றை வெப் சீரிஸாகவும் உருவாக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மணிரத்னத்தின் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சி அவரால் சில முறை தொடங்கப்பட்டு கைவிடப்பட்டது. ஆனால் இம்முறை இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரையும் உள்ளடக்கி படப்பிடிப்பைத் தொடங்கி விட்டார்.

ஆனால் 1500 பக்கமும் 100 க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களும் கொண்ட நாவலை எப்படி இரண்டரை மணி நேர படமாக சுருக்க முடியும் என வாசகர்கள் யோசித்த வேளையில், படம் இரண்டு பாகமாக வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது முதல் பகுதி மட்டுமே திரையரங்கில் திரைப்படமாகவும் அடுத்தடுத்த சீசன்கள் வெப் சீரிஸாக வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் வெப் சீரிஸ்கள் அதிகளவில் வருமானம் ஈட்டி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு ரசிகர்களுக்கு தரமான பொங்கல் பரிசு!