Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் யோகி பாபு திரைப்படம்!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (08:36 IST)
யோகி பாபு நடித்துள்ள மண்டேலா திரைப்படம் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

கோலிவுட் காரர்களுக்கு தற்போது யோகி பாபு இல்லாத வெள்ளிக் கிழமை இல்லை என்றாகிவிட்டது. ஒவ்வொரு வாரமும் வெளியாகும் தமிழ்ப் படங்களில் கட்டாயமாக யோகி பாபு இருக்கிறார். அதனால் அவரை வைத்து கூர்கா, தர்மபிரபு மற்றும் ஸாம்பி ஆகிய படங்கள் வெளிவர ஆரம்பித்தன.

இந்நிலையில் தர்மபிரபு படத்துக்குப் பிறகு இனி கதாநாயகனாக நடிப்பதில்லை என முடிவெடுத்த யோகிபாபு இப்போது மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ள படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் பாலாஜி மோகன் புதிதாக ஓபன் விண்டோ எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மண்டேலா எனும் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளார்.  இந்த படத்துக்கான பைனான்ஸை ஒய்நாட் ஸ்டூடியோஸ் நிறுவனர் சசிகாந்த் செய்துள்ளார். இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்குகிறார். இந்த படத்தின் பிரதானக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் சசிகாந்த் தயாரித்த ஏலே திரைப்படம் நேரடியாக விஜய் தொலைக்கட்சியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments