Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாநாடு டீசரை வெளியிடும் இந்தி இயக்குனர்! – அசத்தல் அறிவிப்பு!

மாநாடு டீசரை வெளியிடும் இந்தி இயக்குனர்! – அசத்தல் அறிவிப்பு!
, செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (16:58 IST)
நடிகர் சிம்பு நடித்து விரைவில் வெளியாகவுள்ள மாநாடு படத்தின் டீசரை பிரபல இந்தி இயக்குனர் வெளியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படம் தற்போது முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

முன்னதாக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் டீசர் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை பிப்ரவரி 3 ல் மாநாடு பட டீசரை பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் மதியம் 02.34 மணியளவில் ட்விட்டர் மூலமாக வெளியிடுவார் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செமையா கீறிங்க சமந்தா... பளபளக்கும் மேனியை காட்டி இழுத்துட்டாங்க!