Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னய்யா டைட்டில் இது? நல்லதுக்கே காலம் இல்ல.! – ட்விட்டரில் எஸ்.ஜே.சூர்யா, வெங்கட் பிரபு கலகல பேச்சு!

என்னய்யா டைட்டில் இது? நல்லதுக்கே காலம் இல்ல.! – ட்விட்டரில் எஸ்.ஜே.சூர்யா  வெங்கட் பிரபு கலகல பேச்சு!
Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:57 IST)
வெங்கட் பிரபு நேர்காணலுக்கு யூட்யூப் சேனல் வைத்த டைட்டில் குறித்து எஸ்.ஜே.சூர்யா பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து விரைவில் வெளியாக உள்ள படம் மாநாடு. டைம் லூப் கான்செப்ட் வைத்து வெளியாகும் இந்த படத்தின் மீது பலரும் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு வெங்கட் பிரபு பேட்டியளித்துள்ளார். இதுகுறித்த யூட்யூப் சேனலின் ட்விட்டர் பக்கத்தில் “சிம்பு, எஸ்.ஜே.சூர்யாவை வைத்து படம் எடுப்பது கஷ்டம்” என டைட்டில் வைத்துள்ளார்கள். இதுகுறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ள எஸ்.ஜே.சூர்யா “உள்ள நல்லாதானே பேசியிருக்காரு. அப்புறம் ஏன் இப்படி ஒரு டைட்டில்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ரிப்ளையில் பதில் சொல்லியுள்ள வெங்கட் பிரபு நகைச்சுவையாக “நல்லதுக்கே காலம் இல்ல சார்” என்று சொல்ல.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிரிக்கும் எமோஜிகளை போட்டுள்ளார். மாநாடு குழுவின் இந்த கலகல உரையாடல் ட்ரெண்டாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையரங்கம் சிதறட்டும். பொடிசுங்களா கதறட்டும்.. ‘குட் பேட் அக்லி’ சிங்கிள் பாடல்..!

தெலுங்கு மற்றும் இந்தியில் கூலி படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ரித்து வர்மா… க்யூட் போட்டோஸ்!

கிளாமர் உடையில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மீண்டும் இயக்குனர் ஆகும் சசிகுமார்.. குற்றப் பரம்பரை சீரிஸ் தொடங்குவது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments