Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்கிவிட் கேம்ஸ் தொடரை விற்றவருக்கு மரணதண்டனை… வடகொரியாவில் கொடூர தண்டனை!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (10:40 IST)
தென் கொரியாவின் பிரபலமான வெப் தொடரான ஸ்க்விட் கேம்ஸ் தொடரை வட கொரியாவில் பார்த்தவர் மற்றும் அதை விற்றவருக்கு பயங்கரமான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொரியன் சினிமா மற்றும் சீரிஸ்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. ஹாலிவுட் சினிமாக்களுக்கு பின்னர் அதிக ரசிகர்களைக் கொண்ட சினிமா உலகமாக கொரியன் சினிமா உள்ளது. இந்நிலையில் நெட்பிளிக்ஸில் ஒரு மாதத்துக்கு முன்னர் வெளியான ஸ்கிவிட் கேம்ஸ் என்ற சீரிஸ் உலகளவில் கவனத்தைப் பெற்று பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த தொடர் குறித்து பேசியுள்ள நெட்பிளிக்ஸின் தலைமை செயல் அதிகாரி ‘இந்த தொடர் உலக அளவில் பிரம்மாண்டமாக ரசிகர்களை சென்று சேரும். ஆங்கிலமல்லாத தொடர்களில் நம்பர் ஒன் சீரிஸாக மாறும்’ எனக் கூறியுள்ளார். இந்நிலையில் வெளியானதில் இருந்து இப்போது வரை 13 கோடி பேரால் நெட்பிளிக்ஸ் தளத்திலேயே பார்க்கப்பட்டுள்ளதாம். ஆங்கில சீரிஸ்களுக்கு இணையாக இதன் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரை வடகொரியாவில் பென் டிரைவில் ஏற்றி விற்றவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ரேடியா ப்ரீ என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நபர் துப்பாக்கியால் சுடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது, மேலும் அந்த தொடரை வாங்கிப் பார்த்தவர்களுக்கும் 5 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளின் வீடியோக்கள் மற்றும் சினிமாக்களைப் பார்ப்பதற்கு வட கொரியாவில் தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments