Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்மூட்டியின் சூப்பர்ஹிட் திரைப்படம் ப்ரமயுகம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
வியாழன், 7 மார்ச் 2024 (07:20 IST)
கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான கதைக்களன்களை தேடி நடித்து வருகிறார் மம்மூட்டி. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புழு, கண்ணூர் ஸ்குவாட் மற்றும் காதல் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன.

இதையடுத்து அவரின் அடுத்த படமாக நைட் வாட்ச் புரொடக்‌ஷன் சார்பில் சசிகாந்த் தயாரிக்கும் பிரமயுகம் என்ற படத்தில் நடித்து அந்த படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. பேய் திரில்லர் வகைப் படமான இதை ராகுல் சதாசிவன் இயக்கி இருந்தார்.

இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னையிலேயே கூட இந்த படம் ரசிகர்களால் பெரியளவில் பார்க்கப்பட்டு சிலாகிக்கப்படுகிறது. இதனால் இந்த படம் தமிழில் டப் ஆகி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் ப்ரமயுகம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் 70 கோடி ரூபாய் அளவில் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments