Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது கௌதம் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் படம்…!

Vinothkumar
புதன், 10 ஜூலை 2024 (16:45 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன.



கடைசியாக அவர் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் சிக்கலில் மாட்டித் தவிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸுக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் அந்த படம் ரிலீஸாவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. அதற்குக் காரணம் அவரின் கடன் தொல்லைகள்தான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் மலையாள சினிமாவில் இயக்குனராகக் கால்பதிக்க உள்ளார். மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தை அவர் இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தை மம்மூட்டியே தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை கேரளாவில் எளிமையாக நடந்துள்ளது. இந்த பூஜை சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. பூஜையில் கௌதம் மேனனோடு நடிகர் மம்மூட்டியும் கலந்துகொண்டுள்ளார். முன்னதாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவருக்குப் பதிலாக சமந்தா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை படத்தின் நாயகி யார் என்பதை இதுவரை படக்குழு அறிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments