மம்மூட்டி நடிப்பில் கௌதம் மேனன் இயக்கும் ‘டோம்னிக்’ படத்தின் டிரைலர் ரிலீஸ்!

vinoth
வியாழன், 9 ஜனவரி 2025 (09:15 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. அதனால் இப்போது மம்மூட்டியை வைத்து ”டாம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்” என்ற மலையாளப் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் கடந்த மாதம் படத்தின் டீசர் ஒன்று வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து படம் ஜனவரி 23 ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகியுள்ளது. டோம்னிக் என்ற துப்பறிவாளராக நடித்திருக்கும் மம்மூட்டி தன்னுடைய அறிவைப் பயன்படுத்தி எப்படி சிக்கல்களை தீர்க்கிறார் என்பதை சுவாரஸ்யமாக இந்த டிரைலர் காட்டியுள்ளது. படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை இந்த டிரைலர் தூண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொஞ்சம் விட்டுருந்தா கவின காலிபண்ணியிருப்பாரு! காப்பாற்றிய வெற்றிமாறன்

தனுஷை தாண்டி ரசிக்கப்பட்ட அபிநய்! கடைசியில் கேட்பாரற்று கிடக்கும் அவலம்

கடவுளின் விதியை மக்கள் மாற்றி எழுதுகின்றனர்! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரவீன் பதிவு..!

கிளாமர் லுக்கில் சுண்டியிழுக்கும் ஜான்வி கபூர்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஹோம்லி லுக்கில் அழகிய போஸில் அசத்தும் துஷாரா விஜயன்!

அடுத்த கட்டுரையில்
Show comments