பிரபல நடிகர் ஒருவர் காரில் பிணமாக இருந்ததை அடுத்து திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.
பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ். இவர் அய்யப்பனும் ஜோஷியும் உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒருமுறை வந்து பார்த்தாயா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் வினோத் தாமஸ் கோட்டயம் அருகே மதுபான பார் ஒன்றின் அருகில் தனது காரை நிறுத்தி உள்ளார். நீண்ட நேரமாக கார் கதவு திறக்காததை அடுத்து சந்தேகம் அடைந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் கார்க்கதவை தட்டி உள்ளனர். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை என்பதால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் கார் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே மயக்கம் அடைந்த நிலையில் நடிகர் வினோத் தாமஸ் இருந்தார். இதனை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்த செய்தி அறிந்து மலையாளத் திரை உலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
Edited by Mahendran